உலகத்தின் முதல் ஆன்டிவைரஸை கண்டறிந்த ஜான் மெக்காபி தற்கொலை செய்தது உறுதி..! - Seithipunal
Seithipunal


ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காபி சிறையில் தற்கொலை செய்து கொண்டதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்திருக்கிறார். 

வர்த்தக ரீதியிலான உலகின் முதல் ஆண்டிவைரஸ் மென்பொருளை கடந்த 1987 ஆம் வருடம் அறிமுகப்படுத்தியவர் ஜான் மெக்காபி (John McAfee). இந்த மென்பொருளை கடந்த 2011 ஆம் வருடம் இன்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.

கிண்டலடிக்கும் மற்றும் கிறுக்குத்தனமான வீடியோக்கள் மூலமாக ஜான் மெக்காபி பிரபலமான நிலையில், அவருக்கென தனியொரு கொள்கையை கட்டமைத்து வாழ்ந்து வந்தார். அவரது தனிப்பட்ட கொள்கை காரணமாக கடந்த 8 வருடமாக வருமான வரி செலுத்தாமல் இருந்த நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் விசாரணையை முன்னெடுத்தது. 

இதனால் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ஜான் மெக்காபி, பார்சிலோனாவிற்கு தப்பி சென்றார். இதன்பின்னர், ஜானின் மீது இருந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கும் வலுப்பெறவே, பார்சிலோனாவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து அமெரிக்காவிற்கு அவர் எப்போது வேண்டும் என்றாலும் நாடுகடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜான் மெக்காபி பார்சிலோனாவில் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை, அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

John MacAfee Suicide is Officially Announce by His Lawyer 25 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->