வரலாற்றில் இன்று... பிரௌனியன் இயக்கத்தை பற்றி ஆய்வு செய்த ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் பிறந்தநாள்!! - Seithipunal
Seithipunal


ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்:

பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் (Jean Baptiste Perrin) 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.

பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் 'பிரௌனியன் இயக்கத்தை" பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுபெற்றார்.

1914-18ஆம் ஆண்டுகளில் நடந்த போரின்போது பொறியாளர் படைக்கு தலைமை அலுவலராக பொறுப்பேற்றார். ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் தன்னுடைய 71வது வயதில் (1942) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

1941ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொதுநலவாய நாடுகளின் 5வது செயலாளர் கமலேஷ் சர்மா பிறந்தார்.

1985ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் ரிக்டர் மறைந்தார்.

1882ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jean Baptiste Perrin birthday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->