நாங்க கல்யாணம் பண்ணனும்.. போராட்டத்தில் குதித்த பெண்கள்.. பதறிப்போன அரசு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. உலகளவில் சுமார் 210 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி துவக்கத்தில் பேரழிவை சந்தித்தது. 

இத்தாலியில் 242,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,914 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அந்நாடே கடுமையான அளவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு தற்போது மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி அந்நாட்டு பெண்கள் மணப்பெண் வேடத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மணப்பெண் வேடமிட்டு, திருமணம் செய்ய வழிவகை செய்யுங்கள் என்ற முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், தற்போது கொரோனா இத்தாலியில் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அரசு மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்துள்ளது. திருமணத்திற்கு உள்ள தளர்வுகளும் தளர்த்தப்பட வேண்டும் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy wedding protest by girls trending video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->