கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்து 100 மருத்துவர்கள் மரணம்.. கண்ணீரை வரவழைக்கும் அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மேலும், தினமும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. 

இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்து இயன்றளவு மக்களை காப்பாற்றி வருகின்றனர். 

இந்த விஷயத்தில் சோக செய்தியாக, நோயாளியை காத்து வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகளவு இருக்கிறது. இதனால் தங்களின் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், இத்தாலி நாட்டில் கரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் 139,422 பேர் பாதிக்கப்பட்டுளள்னர். 17,669 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 100-யை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகளவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy 100 doctors died treatment of corona positive persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->