உலகம் முழுவதும் மரண ஓலத்தை பதிவு செய்த கரோனா.. ஸ்பெயின், ஈரானில் பலி எண்ணிக்கை அதிர்ச்சி உயர்வு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 499 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 10 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலி நாட்டில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 651 பலியாகிஇருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கரோனாவிற்கு மொத்தமாக நேற்று 601 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. 

இதனைப்போன்று ஸ்பெயின் நாட்டில் நேற்று 539 பேர் பலியாகியுள்ளார். தற்போது வரை ஸ்பெயின் நாட்டை பொறுத்த வரையில் 35,136 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை நேற்று 539 ஆக ஏற்பட்டு, மொத்தமாக 2,311 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டிலும் 35,136 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 127 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 2,311 ஆக உயர்ந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran and Spain corona virus death quantity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->