கொரோனாவின் கோரத்தாக்குதலில் அமெரிக்கா.. இந்திய வம்சாவளி மருத்துவர்கள் பரிதவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் பெருமளவு அதிகரித்துள்ளது. தற்போது வரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு நிமிடமும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

மக்களைப் பாதுகாக்க அங்குள்ள மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், இந்திய வம்சாவளி மருத்துவர்களும் தங்களின் உயிரை பணயமாக வைத்து பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த சவாலான பணியில் அவர்களும் தொற்றுக்கு உள்ளாகும் நிலையானது அமைந்துள்ளது. 

கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கணவருடன் சென்று குடியேறிய டாக்டர் மாத்வி ஐயா நியூயார்க் நகரில் கரோனாவால் போராடிக்கொண்டிருந்த அமெரிக்கர்களை காப்பாற்றுவதற்காக களத்தில் இருந்தார். 

இவர் தற்போது நோயாளியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கணவரையும், மகளையும் பார்க்க முடியாது அலைபேசியில் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், வாரத்தின் போது இறந்த 60 வயது முதிர்ந்த பெண்ணிற்கு அவர் சிகிச்சை அளித்த நிலையில், அவருக்கும் காரணம் வைரஸ் பரவியுள்ளது. 

தனது வாழ்க்கையை மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்த நிலையில், இன்று அவர் மரணப் படுக்கையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது இந்திய வம்சாவளி மருத்துவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மற்றும் நியூயார்க் பகுதியில் இருக்கும் வசித்து வந்த இந்திய வம்சாவளி மருத்துவர்கள் தற்போது கரோனாவின் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், தற்போது வரை 10 இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், இந்திய மருத்துவர்கள் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian American doctors affected corona positive and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->