சர்ச்சை கருத்தை தெரிவித்த பாக்... நான்கே வரியில் மொத்தமாக நொறுக்கிப்போட்ட இந்தியா.! - Seithipunal
Seithipunal


ஐ நா சபை பொது கூட்டத்தில் காணொளி மூலமாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், இந்திய நாட்டின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக தெரிவித்து இருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதாகவும், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாதத்தை சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்று வர்ணித்து அதற்கு பாகிஸ்தான் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

பாகிஸ்தான் பிரதமர் பேசியபோது வெளிநடப்பு செய்த இந்திய தூதர் மிஜோதா வினிதர், அவரது பேச்சு நிறைவுபெற்றவுடன் பங்கேற்றுக்கொண்டார். இதன்பின்னர் பேசிய மிஜோதா வினிதர், " உலகிற்கு தேவையான யோசனைகள் மற்றும் பிற விஷயங்களை தெரிவிக்க பாகிஸ்தானிடம் எதுவும் இல்லாததால், இடைவிடாத விஷத்தை கக்கி வருகிறது. 

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு, அரசு நிதியில் இருந்து பாகிஸ்தான் ஓய்வுதியம் அளித்து வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதற்கு முன்பு அமெரிக்காவில் நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார். 

மேலும், இந்திய உள்விவகாரங்களில் பாகிஸ்தான் கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இனியும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பயங்கரவாதம், இரகசிய அணுஆயுத தயாரிப்பு மட்டுமே பாகிஸ்தானில் 70 வருட கால சாதனை என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA UN CHIEF ANSWER TO PAK PRESIDNET IMRAN KHAN SPEECH


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->