இந்தியா தானாகவே பாகிஸ்தானிடம் வைத்த திடீர் கோரிக்கை! பிரதமர் மோடிக்கு கிடைக்குமா அனுமதி!  - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 21ம் தேதி செல்லும் அவர் 27 ஆம் தேதி வரை 7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவின் பல நகரங்களில் பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். 

இதில் 22 ஆம் தேதி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மோடியுடன் கலந்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார். 

23ம் தேதி நியூயார்க் செல்லும் மோடி, தேதி 27 ஆம் தேதி காலை ஐநா பொது சபையில் உரையாற்றுகிறார். இந்த பயணத்திற்கான விமான பயணத்தின் பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானமானது, பாகிஸ்தானின் வான்பரப்பில் பறப்பதற்கு இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தானிடம் அனுமதி அளிக்க கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு அறிவிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானத்திற்கு பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா தானாகவே பாகிஸ்தானிடம் அனுமதி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அனுமதி அளிக்குமா அல்லது குடியரசுத்தலைவருக்கு அனுமதி மறுத்தது போல பிரதமருக்கும் அனுமதி மறுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India requests to Pakistan to allow use of its air space for PM Modi's flight to New York


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->