இத்தாலியில் 112 பேர்; ஈரானில் 234 பேர் - களத்தில் இறங்கிய இந்தியா!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ் சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும், ஈரான் மட்டும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஈரான் நாட்டில் இருவருக்கு கரோனா பரவியிருப்பது தெரியவந்த நிலையில், தற்போதுவரை சுமார் 611 பேர் ஈரானில் பலியாகியுள்ளனர். சீன நாட்டினை தவிர்த்து அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் முதல் நாடாக உள்ளது. 

மேலும், தற்போது வரை ஈரான் நாட்டில் 12,739 பேர் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

தற்போது வரை ஈரானில் 611 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கொம் நகரில் இருந்து கரோனா பரவத்துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடித்தொழில் செய்து வரும் தமிழர்கள் தங்களை அழைத்து செல்ல மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியை சார்ந்த 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கிஸ் தீவு, சின்கா தீவு போன்ற நான்கு தீவுகளில் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

இவர்களை மீட்டு வர தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்ட நிலையில், ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த 234 இந்தியர்கள் தற்போது வரை தாயகம் திரும்பியுள்ளனர். தற்போது மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மட்டும் தாயகத்திற்கு திரும்பி அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், பிறரையும் அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே போல், கொரோனா தாக்கத்தால் இத்தாலியில் சகல விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால், திரையரங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு, சாலைகள் முடங்கி கிடக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து படிக்க சென்ற மாணவர்கள் 112 பேர் இத்தாலியில் சிக்கியிருந்தனர். தங்களை மீட்டு செல்லுமாறு இந்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அவர்களை மீட்க இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india ready to save indian students from iran ittaly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->