பாம்பே கயிறு... தெறித்தோடிய இளைஞர்கள்., பதட்டம் இல்லாமல் ஸ்கிப்பிங் விளையாடிய சிறுசுகள்.!! - Seithipunal
Seithipunal


பாம்பு என்று கூறினாலே உடலில் ஒரு விதமான பயம் என்பது அனைவருக்கும் இருக்கும்.. ஓடும் பாம்பை பிடிக்கும் வயது கொண்ட இளைஞர்கள் பாம்பை கையால் பிடித்து வித்தை காட்டினாலும்., அவர்களின் மனதில் ஒரு ஆழமான பக்கத்தில் அறியாத பயம் ஒன்று இருக்கத்தான் செய்யும் என்பதே நிதர்சனம்.. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக கூட சாலையில் அமைதியாக சென்று கொண்டு இருந்த குட்டி பாம்பை கையில் பிடித்து விளையாடிய நபரொருவர் உடலில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு இருந்தார். அவர் பாம்பை வைத்து விளையாடும் போது., பாம்பு எதிர்பாராத விதமாக அவரின் துண்டை பற்களால் பற்றிக்கொண்டது. 

துண்டில் இருந்து பாம்பு விடுபட மறுத்ததை அடுத்து., டிக்டாக் விடியோவுக்காக வித்தை காட்டிய நபர் துண்டை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக ஓடிய பரபரப்பு காமெடி வீடியோ காட்சிகள் நம்மிடையே பெரும் வைரலாக மாறி., அதனை கண்டு நாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தோம். இந்த நிலையில்., செத்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வியட்னாம் நாட்டில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிரமத்தில் வசித்து வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் விளையாடுவதற்கு பொருள் கிடைக்காமல் சுற்றி திரிந்த நிலையில்., இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அப்பகுதியியல் பாம்பொன்று இறந்து புதரில் இருந்துள்ளது. இதனையடுத்து பாம்பை தூக்கி கொண்டு வந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அதனை விளையாட்டு பொருளாக மாறியுள்ளனர். 

இவர்களின் திட்டப்படி செத்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல மாற்றி., பாம்பின் வாயை ஒரு நபரும்., பாம்பின் வால் பகுதியை ஒரு நபரும் பிடித்துக்கொள்ள., மற்றொரு நபர் நடுவில் நின்று ஸ்கிப்பிங் விளையாட்டை போல விலகி மகிழ்கிறார். இவர்களின் குறும்பு தனத்தை கண்டு வியந்த நபர் தனது அலைபேசியில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்ற., அது தற்போது வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vietnam child using snake like rope skipping game


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->