உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ஈரான் நாட்டிற்கு இடையேயான பிரச்சனை என்பது உலகறிந்த பிரச்சனையாகும். ஈரான் நாட்டின் முக்கிய தளபதி அமெரிக்கா நாட்டு இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இருநாட்டிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தருணத்தில், அமெரிக்கா நாட்டின் போர் விமானம் என்று எண்ணி ஈரான் உக்ரைன் நாட்டுடைய பயணிகள் விமானத்தினை சுட்டு வீழ்த்தியது. இந்த விபத்தில் 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டை சார்ந்தவர்கள் என மொத்தம் 176 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இந்த விமானம் தவறுதலாக சுடப்பட்டதை ஈரான் இராணுவம் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஈரான் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும், குற்றத்திற்கு காரணமான நபர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் உலக நடுகல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஏன நாட்டின் அதிபருக்கும் எதிராகவே உள்நாட்டில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தவறுதலாக சுடப்பட்ட விமானம் டோர் - எம் 1 என்கிற இரு குறுகிய நிலையை கொண்ட ஏவுகணையால் தாக்கப்பட்டது என்று ஈரான் நாட்டின் சிவில் விமான அமைப்பு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஜனவரி மாதத்தின் 8 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி, 06.12 மணிக்கு தெக்ரானின் இமாம் காமினி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், 8100 அடியில் பரந்த நேரத்தில் விமானக்கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வடக்கில் இருந்து போயிங் 737 - 800 விமானத்தின் மீதும் இரண்டு டோர் - எம் 1 ரக ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Ukraine flight air attack rocket identity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->