துருக்கி நிலநடுக்கம்... அதிர்ச்சியாகும் வகையில் வெளியான தகவல்கள்..! - Seithipunal
Seithipunal


துருக்கி நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் நேற்றிரவு நேரத்தில் கடுமையான நிலநடுக்கமானது ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், துருக்கியின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 750 கிமீ தொலைவில் உள்ள எலாஜிக் மாகாணத்தில் இருக்கும் சிவிரைஸ் நகரினை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதியான நிலையில், அங்குள்ள 4 மாகாணத்திலும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கரமாக அங்குள்ள எலாஜிக், மாலத்யா மாகாணத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மற்றும் இடித்து தரைமட்டமாகி, கட்டிடங்களில் வசித்து வந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி அலறித்துடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துவங்கினர். 

அங்குள்ள எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பின் காரணமாக சுமார் 18 பேர் பலியாகி இருந்தனர். மேலும், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்து இருந்தனர். 

இந்த நிலையில், தற்போதுவரை மீட்பு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1400 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்திற்கு பின்னான 274 அதிர்வுகளின் காரணமாக இந்த சோகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in turkey earthquake peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->