பாறை இடுக்கில் பிணமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்.! அதிரடி நடவடிக்கையில் நீதிமன்றம்.!!  - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டை சார்ந்த பெண்மணியின் பெயர் மிரம் பீல்ட் (வயது 26). இவர் தாய்லாந்து நாட்டை சுற்றிபார்க்க ஆசைப்பட்டு., தாய்லாந்து நாட்டிற்கு கிளம்பி சென்று சுற்றுலாவை கொண்டாடி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்., இவர் கடந்த மார்ச் மாதத்தின் போது சுமார் மாலை 6 மணியளவில் கோ சி சிங் தீவு பகுதியில் அவருடைய உடல் நிர்வாணமாக பாறைகளுக்கு நடுவில் இருந்து எடுக்கப்பட்டது. 

அவருடைய உடலில் இரத்தக்கறைகள் படிந்தும்., முகத்தை கண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இவரின் சடலத்தை கண்டு பதறிப்போன உள்ளூர் நபர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

died, murder, killed,

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ததில்., அதே பகுதியை சார்ந்த உள்ளூர் வாசியான ரொனால்நன் ரோமுறுன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். 

அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில்., அந்த பெண் சுற்றுலா வந்த சமயத்தில் தீவில் இருக்கும் மலைப்பகுதிக்கு பயணிப்பதை அறிந்து., அவரை பின்தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை தேர்வு செய்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தேன். அவரை நான் பலாத்காரம் செய்த சமயத்தில் அவருக்கு எனது முகம் தெரியும்., இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். 

thailand, thailand rap and murder case,

எனது திட்டப்படி அவருடைய முகத்தை சிதைப்பதற்கு கல்லை அவரின் தலையில் போட்டு கொலை செய்து., அங்குள்ள பாறையின் இடுக்கில் போட்டேன் என்று தெரிவித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் குற்றத்தை குறைக்க இயலாது. ஏனெனில் அவர் செய்த தவறை இனி யாரும் செய்ய கூடாது என்று கூறி மரண தண்டனையை தீர்ப்பளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thailand girl rapped and murder case court order die judgment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->