அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக தொடர்ந்து மிரட்டும் இணையத்திருட்டு கும்பல்.! பரிதாபமாக பலியாகும் பெண்கள்.!!  - Seithipunal
Seithipunal


சுவிச்சர்லாந்து நாட்டில் இருக்கும் இளம் பெண்களிடம் அவர்களது அந்தரங்க காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் பிராங்குகள் (இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 55 இலத்தச்சத்திற்கும் மேல்) கொண்ட தொகையை கொள்ளையடுத்துள்ளனர். 

இந்த சம்பவமானது சுவிச்சர்லாந்து நாட்டில் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில்., இணையத்தளம் மூலமாக பெண்களை அதிகளவில் மிரட்டி கொள்ளையடித்த சமபவமானது அரங்கேறியுள்ளது. 

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை போலியான மிரட்டல்கள் என்பதும்., இதனை அறியாத பெண்கள் சில அந்தரங்க காட்சிகளை அவர்களின் அலைபேசிக்கு அனுப்பியதும்., அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பணங்கள் வழங்கியது தெரியவந்தது. 

மேலும்., சம்பந்தப்பட்ட பெண்களின் அலைபேசி எண்., இணையதள பக்கங்களின் கடவு சொற்கள் ஆகியவற்றை கூறி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை திருடி., புகைப்படங்கள் இல்லாத பெண்களிடம் அலைபேசியில் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளனர். 

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதும் பல பெண்கள் அவர்கள் கேட்கும் தொகையை வழங்கி வந்துள்ளனர். மேலும்., இது மட்டுமின்றி உலகம் முழுவதிலும் சேர்த்து மொத்தமாக சுமார் 22 மில்லியன் டாலர்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க அரசாங்கம் வற்புறுத்தி வந்தாலும்., பலர் கொள்ளையர்களுக்கு பயந்து பணத்தை வழங்கி வருகின்றனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

English Summary

in Switzerland girl blackmailed by piracy of her pictures


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal