மருத்துவமனையில் அரங்கேறும் தொடர் அலட்சியம்.!! 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட நோயாளியின் இரத்தம்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள ஏறாவூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை பகுதியை சார்ந்த சிறுவனின் பெயர் ஜெயகாந்தன் (வயது 9), இந்த சிறுவன் கடந்த 1 ம் தேதியன்று நடைபெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில்., அங்குள்ள செங்கலடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

செங்கலடி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுவனுக்கு முதலுவிதவிகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிறுவனுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 

அதன்படி சிறுவனுக்கு இரத்தம் ஏற்றப்பட்ட நிலையில்., சிறுவனுக்கு அருகில் இருந்த நபருக்கு ஏற்றப்படவேண்டிய இரத்தத்திற்கு பதிலாக சிறுவனுக்கு இரத்தத்தை மாற்றி ஏற்றியுள்ளனர். அந்த நேரத்தில் சிறுவனின் கிட்னியில் இருந்து இரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து., தீவிர சிகிச்சை பிரிவிற்கு மற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 

தனது மகன் எப்படியாவது உயிருடன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர்கள் கடந்த 17 ம் தேதியன்று சிகிச்சை அறைக்குள் எந்த விதமான அசைவும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் முறையிட்ட பின்னர் சிறுவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., சிறுவனுக்கு தவறுதலாக இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விஷயம் வெளிவரவே பெரும் பிரச்சனை உருவாகியது. 

சிறுவனுக்கு இரத்தம் தேவையில்லாத நேரத்திலும் வலுக்கட்டாயமாக இரத்தம் ஏற்றப்பட்டதும்., அருகில் இருந்த நோயாளிக்கு செலுத்தப்படவேண்டிய இரத்தமானது சிறுவனுக்கு தவறுதலாக ஏற்றப்பட்டதன் விளைவாக., கிட்னி செயலிழந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததும்., இதனை பெற்றோரிடம் தெரிவிக்காத மருத்துவமனை நிர்வாகம் பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in srilanka a child died by wrong treatment by doctor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->