தென்கொரியா கரோனா பாதிப்பு எதிரொலி.. தற்காலிகமாக ஆலையை மூடிய கார் நிறுவனம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹீபெய் மாகாணத்தின் வுகான் நகரை மையமாக வைத்து கடந்த டிசம்பர் மாதம் பரவத்துவங்கிய கரோனா வைரஸானது, சீனா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு பரவியது. இந்த நோயின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்த நோய் பரவியதற்கு தற்போது வரை பல காரணங்கள் புதிது புதிதாக கூறிவரும் நிலையில், பலி எண்ணிக்கை தற்போது வரை 2800 ஐ நெருங்கியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

சீன அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு பின்னர், கடந்த சில தினமாக உயிரிழப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், தென்கொரியா மற்றும் ஈரான் நாடுகளில் உயிரிழப்புகள் துவங்கியது. இதனால் மக்கள் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். 

இந்த சமயத்தில், கரோனாவின் வைரஸ் தாக்குதல் காரணமாக தென்கொரிய நாட்டில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தின் தொழிற்சாலையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in South Korea Hyundai company temporary stops work due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->