1600 ஆபாச புகைப்படங்கள்., வீடியோ காட்சிகள் இணையத்தில் விற்பனை.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! விசாரணையை அதிதீவிரபடுத்தும் காவல் துறை.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஆபாச வகையில் உள்ள காணொளிகளை தயாரிப்பது மற்றும் இணையத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில்., இந்தியாவிலும் பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்கொரிய நாட்டில் இருக்கும் கும்பலொன்று அங்குள்ள பல்வேறு விடுதிகளில் பெண்கள் தங்கும் அறைகளை குறி வைத்து இரகசிய காமிராக்கள் மூலமாக அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை பதிவு செய்துள்ளது. 

இந்த காணொளி காட்சிகளை இணையத்தில் விற்பனை செய்ததன் மூலமாக பெரும் தொகையை சம்பாதித்துள்ளது. இந்த பிரச்சனையில் சுமார் 1600 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாககவும்., இது குறித்த விசாரணையை கைதான 4 பேரிடம் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும்., கடந்த ஆகஸ்டு மாதம் முதலாக இந்த ஆபாச காணொளிகளை பதிவு செய்து., சுமார் 6200 டாலர்கள் (இந்திய மதிப்பில் 4 இலட்சத்திற்கும் மேல்) பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்களின் குற்றமானது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் சுமார் 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.18 இலட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவலும்., இது போன்ற பல கும்பலும் பிடிபடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in south korea girl sexual video capturing and selling online gang


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->