முத்துக்கு முத்தாக போல கண்டறியப்பட்ட அறிய முத்து..! எத்தனை வருடங்கள் பழமையானது தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவீனமயமான தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் போன்றவை நவநாகரீகத்தோடு விளங்கி வந்தாலும்., மனிதனின் தோற்றம் மற்றும் யோசனை எல்லாமே பழைமையான நாகரீகத்தை கண்டறிவதில் தான் ஆர்வத்துடன் உள்ளனர். 

தமிழகத்தில் உள்ள கீழடி முதல் உலகின் உள்ள அனைத்து மூலைகளிலும் தொல்பொருள் ஆய்வானது நடைபெற்று வருகிறது. இவ்வாறான ஆய்வுகளில் கிடைக்கும் அறியவகையிலான பொக்கிஷங்கள் அரசின் ஆவலை மேலும் அதிகரிக்க செய்கிறது. 

இதனைப்போன்ற ஆய்வுகளின் மூலமாக பழங்காலம் குறித்த அவசியத்தையும் அது உணர்த்துகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராக இருந்து வரும் அபுதாபி நாட்டில் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தொன்று கண்டறியப்பட்டுள்ளது. 

அங்கிருக்கும் மறவா தீவு பகுதியில் கடந்த சில வருடங்களாக தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கற்கால கற்சிற்பங்கள்., பீங்கான் பொருட்கள்., கற்களால் செய்யப்பட்ட மணிகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில்., தற்போது உலகின் பழைமையான சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்னான முத்தொன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த முத்து கிமு.5800 வருடங்கள் முதல் கிமு.5600 வருடங்களுக்கு இடையில் கண்டறியப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தற்போது கண்டறியப்பட்டுள்ள முத்தானது அமீரக தொல்பொருள் ஆய்வாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ள நிலையில்., இதற்கு "அபுதாபி முத்து" என்று பெயரிடப்பட்டு., லூவர் அருங்காட்சியத்தில் வரும் 30 ஆம் தேதியன்று பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Saudi Arabia muthu stone discovered by scientist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->