வெடித்து சிதறிய பெட்ரோல் நிலையம்.. தெறித்தோடிய மக்கள்.. காத்திருந்த அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் அரங்கேறும் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். சில சமயம் அதிஷ்டத்தின் மூலமாக எந்த விதமான காயமும் இன்றி மக்கள் தப்பிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்., சவூதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் விற்பனை செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அதிஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பிய காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. 

சவூதி அரேபியாவில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் மக்கள் காரில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., பெட்ரோல் நிரப்பும் முனையத்தில் இருந்து சிறிது தூரத்தில் பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோலிய பொருட்கள் குழாய் வெடித்து சிதறியது. 

fire accident,

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெட்ரோல் நிலைய பணியாளர்கள் மற்றும் மக்கள் அலறியடித்து ஓடிய காட்சிகள் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. 

இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில்., பூமிக்கடியில் வைக்கப்பட்டு இருந்த பெட்ரோலிய பொருட்களின் அழுத்தம் அதிகமாகி வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., இவ்விபத்தில் நல்ல வேலையாக யாருக்கும் காயங்கள் கூட ஏற்படவில்லை. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in saudhi arabia petrol bulk storage tank exploded


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->