மதுபான விற்பனை முட்டுக்கட்டை.! வாழ்நாட்கள் எண்ணிக்கை அதிகரித்த நாடு.!! அறிவிப்பை வெளியிட்ட டபிள்யூ.எச்.ஓ.!! - Seithipunal
Seithipunal


எந்த காலத்திலும் இல்லாத அளவிலான மதுவிற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையானது ரஷியாவில் வெகுவாக குறைந்ததை அடுத்து., ரஷிய நாட்டின் மக்களுடைய ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்., மொத்தமாக ரஷிய நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கையானது 43 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய காலங்களில் ரஷியாவின் எப்பகுதிக்கு சென்று திரும்பினாலும்., அங்குள்ள கடைகளில் மதுபான வகைகளின் அணிவகுப்பும்., குவளையில் பொங்கி வழியும் பியரும்., சுவையான கருவாட்டு துண்டுகளும் என்றும் காட்சியளித்து கொண்டு இருக்கும். இந்த நிலையில்., தற்போது இந்த நிலையானது தலைகீழாக மாறியுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே ரஷ்ய அரசு மேற்கொண்ட மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை அடுத்து., மது அருந்துபவரின் எண்ணிக்கையானது வெகுவாக குறைந்துள்ளதாகவும்., மது மற்றும் போதை போருக்கு அடிமையானவர்கள் என்று கூறி பிற நாட்டவரால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில்., மதுவால் பல்வேறு உயிரிழப்பும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. 

மது உடல் நலத்திற்கு தீங்கானது, drinking in injurious to health and family,

மது மற்றும் போதை பழக்கத்தால்., பணிகளுக்கு சென்று வரும் இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்ததை அடுத்து., பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனையடுத்து மதுவினை கட்டுப்படுத்தும் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு., மதுவிற்பனை நேரம் குறைவு., மதுவிற்கு தடை விதிக்கும் பொருட்டில் விளம்பர பதாகைகள்., மதுவிற்கான கூடுதல் வரி விதிப்பு போன்ற கருமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து., மது அருந்துவோரின் எண்ணிக்கையானது ரஷ்யாவில் பாதியாக குறைந்தது. மேலும்., இரவு 11 மணிவரை மட்டுமே மதுவை வாங்கவும்., விற்பனை செய்யவும் தடைகள் அதிரடியாக விதிக்கபட்டஹே அடுத்து., ரஷிய நாட்டவரின் ஆயுட்காலமானது அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்காக மதுக்கடையை திறந்து வைத்து., விழாக்கோலம் போல சூடித்து குடியை கெடுக்கும் அரசு மற்றும் மதுபான பேர்வழிகள் முன்னிலயில்., ரஷியாவின் நடவடிக்கை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia increase life year reason for drinking activity loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->