பசித்தும் ஆட்டை தின்னாத புலி.! ஆட்டிற்கு துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் உள்ள விளாடிவோஸ்ட்க் நகரில் இருக்கும் உயிரியல் பூங்காவில் "ஆமூர்" என்கிற சைபீரிய புலியானது வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த புலிக்கு கடந்த 2015 ஆம் வருடத்தில் உணவாக ஆடொன்றை புலிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அன்றைய தினத்தில் பூங்கா ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ஆட்டினை அடித்து சாப்பிட வேண்டிய புலி., அதன் மீது அன்பு மழையை பொலிந்து தள்ளியுள்ளது. மேலும்., இவைகள் மிகுந்த நட்புடன் பழகி வந்து இருந்துள்ளது.

இதனை கண்டு பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிய பணியாளர்கள் புலியுடன் இருந்த ஆட்டுக்குட்டியை "தைமூர்" என்ற பெயரினை சூட்டி பழக அனுமதித்துள்ளனர். இந்த சமயத்தில் ஆடுடன் புலி விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகியது. 

park,

புலியின் குணத்தை அறிந்த கொண்ட ஆடு அவ்வப்போது செல்லமாக விளையாடிக்கொண்டு சண்டையிட்டு வந்த நிலையில்., புலியும் இதனை கண்டு கொள்ளாது விளையாடி வந்துள்ளது. 

கடந்த 2016 ஆம் வருடத்தின் ஜனவரி மாதத்தின் போது விளையாடிக்கொண்டு இருந்த புலியை ஆடு வாயில் கவ்வி தூக்கியத்தில்., ஆட்டிற்கு உடல்நலக்குறைவானது ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து ஆட்டையும் - புலியையும் தனித்தனியே வைத்து பராமரித்து வந்த நிலையில்., பல விதமான சிகிச்சைகள் மேற்கொண்டும் மீளாத்துயரில் இருந்து வந்த ஆடு., தற்போது உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த தகவலானது தற்போது வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia goat tiger friend goat died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->