லேண்டிங்கின் போது படாலான தெறித்த லேண்டிங் கியர்.. சடாலென சறுக்கி சென்ற விமானம்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


ரஷ்யா நாட்டில் உள்ள மஸ்கொ நகரில் இருந்து ஸ்சின்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் வழக்கம் போல சுமார் 94 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. 

இந்த விமானம் மஸ்கொவில் இருந்து புறப்பட்டு, ஸ்சின்ஸ்க் விமான நிலையத்தை அடைந்த நேரத்தில் விபரீத காத்திருந்துள்ளது. விமானம் ஓடுதளத்தில் விமான அதிகாரிகளின் அனுமதிப்படி தரையிறங்கியுள்ளது. 

இந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக விமானத்தின் தரையிறங்கும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, விமானத்தின் வால்பகுதி தரையை தட்டியுள்ளது. இதனையடுத்து விமானம் தரையில் உரசி சென்றபடி நின்றுள்ளது. 

நல்ல வேலையாக விமானம் பெரிய அளவிலான சேதங்கள் அடையாமல் இருந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து, பின்னர் அவசர கால வழியின் மூலமாக வெளியே வந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia flight landing gear problem peoples luck


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->