கடும் பனியில் பெற்றோர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் இருக்கும் ஹபார்வைஸ்க் பிராந்தியத்தில் தம்பதியொருவர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் 7 மாதமேயான ஆண் குழந்தை இருந்து வந்த நிலையில்., குழந்தை நல்ல காற்றினை சுவாசிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். 

இவர்களின் திட்டப்படி குழந்தையின் ஆரோக்கியத்திற்கும்., நல்ல தூக்கத்திற்கும் அங்குள்ள பால்கனியில் குழந்தையை அமர வைத்துள்ளனர். இந்த நேரத்தில் அப்பகுதியில் கடுமையான குளிரும் நிலவியுள்ளது. 

வெப்பநிலை சுமார் 7 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு இருந்த நிலையில்., குழந்தையும் குளிரில் அயர்ந்து உறங்கியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று எண்ணி தங்களின் பணியை பார்க்க துவங்கியுள்ளனர். 

baby died, baby,

இந்த நிலையில்., சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக குழந்தை கடுமையான குளிரால் தவித்து வந்த நிலையில்., பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும்., குழந்தை ஹைப்போதர்மியாவால் உயிரிழந்ததாக தெரியவருகிறது. 

ஹைப்போதர்மியா என்பது கடுமையான குளிரின் காரணமாக உடலின் வெப்பநிலை குறைகிற நேரத்தில் ஏற்படும் நோயாகும். இது தொடர்பாக அங்குள்ள சுகாதாரத்துறை அமைச்சகம்., குளிரினால் குழந்தைகள் அதிகளவில் வேகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும்., இவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia baby died due to snow fall


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->