குழந்தையை பிரசவித்த நிலையில் தாயின் அந்த ஒரு சிரிப்பு.! அதுவே இறுதி சிரிப்பாய் மாறிய துயரம்.!! மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்.!!  - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டை சார்ந்த அலிசா டேபிக்கினா என்ற 22 வயதுடைய இளம்பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இவருக்கு பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது.

பிரசவ வலியால் இவர் துடிக்கவே இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அந்த சமயத்தில் அங்கிருந்த பெண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு., பிரசவத்தை பார்த்துள்ளார். 

சுக பிரசவ முறையில் குழந்தை பிறந்த நிலையில்., குழந்தையை எடுத்து செவிலியர்கள் குழந்தையை தாயின் முகத்தருகே காட்டியுள்ளனர். மருத்துவர் குழந்தையின் தொப்புள் கொடியை அவசர அவசரமாக பிரிகிறேன் என்ற பெயரில் தொப்புள் கொடியை பலமாக இழுத்துள்ளார். 

இதனால் கர்ப்பப்பையானது வெளிப்புறமாக வந்துள்ளது. மேலும்., குழந்தையை பிரசவித்த வலியால் துடித்த அவருக்கு ஏற்பட்ட பெரும் வலியை அடுத்து., கோமாவிற்கு சென்று மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை பார்த்து சிரித்து கொண்டு இருந்த நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அவலத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

அவர் கோமா மற்றும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பதை மறைத்து அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்றும்., அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த தகவலை அறியாத குடும்பத்தார் பின்னர் அவரின் இறப்பிற்கு பின்னர் மர்மம் உள்ளதாக எழுப்பிய பிரச்சனையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் அந்த வருடம் தான் படிப்பினை நிறைவு செய்து விட்டு புதிதாக பணிக்கு வந்தவர் என்றும்., அவரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்ததும்., அதனை மறைக்க பல பொய்கள் கூறியதும் தெரியவந்துள்ளது.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia a girl died by wrong pregnancy doctor medicine


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal