ஏர்போட்டில் அத்தனை பேர் முன்னால், ஒவ்வொரு ட்ரெசாக...பெருமாளே..! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தான் அணிந்து இருந்த ஆடைகளுக்கு மேலேயே மேலும் சில ஆடைகளை அணிந்து கொண்டு இருந்தார். இதனை கண்ட உடன் அங்குள்ள மக்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. 

பொதுவாகவே விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது அவர்களின் எடுத்துச் செல்லும் உடமைகள் தான். அதன் எடையும் கணக்கிடப்பட்டு தான் விமானத்தில் அனுமதி செய்யப்படும். 

நாம் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் அதிகமான பயணம் மேற்கொள்ளும் நிலையில்., நாம் கொண்டு செல்லும் சாதாரண பைகளை தவிர்த்து பிற எடையுள்ள பொருட்களை பேருந்தில் ஏற்றினால்., அதற்கு தகுந்தபடி உள்ள கட்டணம் வசூல் செய்வது வழக்கம். 

மேலும்., விமானத்தில் கைப்பையில் பொருட்கள் எடை நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக எடையில் இருந்தால்., அதற்கு பணம் கட்ட வேண்டும். நமது பேருந்து மற்றும் ரயில் பயணங்களை போலவே இது விமானத்திற்கும் பொருத்தும். 

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் ஒருவர் கடந்த ஒன்றாம் தேதியன்று விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில்., அவர் அவருடன் தனது உடமைகள் வைத்திருந்த பையை கொண்டு சென்றுள்ளார். 

அதிக எடையுடன் பை இருந்தால் எப்படியும் இதற்கு வரி கட்ட வேண்டியிருக்கும் என்று எண்ணி, அவர் பெட்டிகளில் உள்ளே இருந்த ஆடைகளை எடுத்து அணிந்துள்ளார். மேலும்., விமான நிலையத்தை பொருத்தவரையில் வழக்கமாக முதலில் பெட்டிகள் சாதாரண பரிசோதனை செய்யப்பட்டு பின்னர்., எடை பரிசோதனை செய்யப்படும். 

சாதாரண பரிசோதனையில் அந்த பெண் மீண்டு வந்த நிலையில்., பின்னர் எடை பரிசோதனையை நினைத்து பயந்து அதிலிருந்து ஆடைகள் அனைத்தையும் எடுத்து மடமடவென உடுத்தியுள்ளார். 

முதலில் இவரது பையை சோதனை செய்கையில் அது 9.6 கிலோ இருந்த நிலையில் இவர் 2 கிலோ குறைப்பதற்காக எப்படியோ கஷ்டப்பட்டு ஆடைகளை உடுத்தி 7 கிலோக்கு கொண்டு சென்றுள்ளார். 

மேலும்., இவரது பையில் வைத்திருந்த டீசர்ட்., சட்டைகள்., பனியன் மற்றும் சாட்ஸ் போன்றவற்றை வரைமுறை இல்லாமல் அணிந்துகொண்டு 7 கிலோ அளவிற்கு லக்கேஜை கொண்டு வந்துள்ளார். இந்த விஷயத்தை கவனித்த சில பயணிகள் சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டது தற்போது அதிகமாக வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Philippians girl wear 2 kg dress in airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->