பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்... அதிர்ச்சிதரும் வகையில் வெளியான பலி எண்ணிக்கை...!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் நிலநடுக்கமானது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பல துயரங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டு வருகிறது. தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 ஆகா பதிவாகியுள்ளது. 

அங்குள்ள மத்திய மிண்டானாவோ பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்., கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கிய நிலையில்., பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் போன்றவற்றில் பணியில் இருந்த அனைவரும் பதறியபடி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலநடுக்கமானது துலுகன் நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 26 கிமீ தொலைவில் நடந்ததாகவும்., பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாடு நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள காரணத்தால்., அதிகளவு நிலநடுக்கம் ஏற்படுவதும்., மக்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்ந்துள்ளது. மேலும்., தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும்., அங்குள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில்., ஐந்து மாணவர்கள் பரிதாபமாக காயமடைந்தனர். மேலும்., வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 66 வயது மதிக்கத்தக்க முதியவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Philippians earthquake peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->