பெருவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பதைபதைப்பு வீடியோக்காட்சிகள் வெளியீடு.! பயம் கொண்ட நபர்கள் வீடியோவை காணவேண்டாம்.!!  - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவை பொறுத்த வரையில் தற்போது அவர்களுக்கு போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். அந்த நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உலுக்கிய நிலநடுக்கத்தாலும்., அதற்கு பின்னர் தாக்கிய சுனாமியாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்., தற்போது அங்குள்ள எரிமலையானது வெடித்து சிதறியது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 

இந்த சமயத்தில்., இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில்., நேற்று இரவு மற்றும் இன்று காலையில் அந்தமான் மற்றும் மேற்குவங்கம் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் சுமார் 4.8 ஆகவும்., 5.4 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில்., தற்போது அமெரிக்க நாட்டில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


அமெரிக்க நாட்டில் உள்ள பெரு பகுதியில் தற்போது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அறிந்த மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ள நிலையில்., தற்போது அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்த தகவல் வெளியாகவில்லை. 


இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அங்குள்ள பிரேசில்., கொலோம்போ மற்றும் எக்குவடோர் போன்ற பகுதியில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 109 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை தற்போது வரை வெளியாகவில்லை... இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த வீடியோ பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in peru earthquake video and images released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->