சிறுநீரில் வெளியேறிய ஆல்கஹால்.. பெண்ணின் உடலில் ஏற்பட்ட பெரும் மாற்றம்.. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தை சார்ந்த 61 வயதாகும் பெண்மணி கல்லீரல் அலர்ஜி நோயின் காரணமாக பாதிக்கப்ட்டுள்ளார். இந்த பிரச்சனையை சரி செய்ய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்வவர்களிடம் சென்றுள்ளார். 

இவர் மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தில், மருத்துவர்கள் இவரது சிறுநீரை பரிசோதனை செய்து விட்டு, இவர் மது போதையில் தங்களிடம் வந்துள்ளதாக எண்ணியுள்ளனர். மேலும், இவரது உடலில் இருந்து வெளியேறிய சிறுநீரகம் ஆல்கஹாலின் தன்மையை கொண்டிருந்துள்ளது.

இந்த பெண்மணி அதிகளவு மதுவிற்கு அடிமையான நபர் என்று கூறி மருத்வவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், தன் மீதான குற்றசாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்துள்ளது.

இது தொடர்பான சோதனையில், இவர் சர்க்கரை சார்ந்த உணவுகளை உண்ட பின்னர், இவரது சிறுநீரக பையில் இருக்கும் பூஞ்சை காளானின் காரணமாக சர்க்கரை ஆல்கஹாலாக மாறியுள்ளது. இதனால் இவர் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் ஆல்கஹால் வெளியேறியுள்ளது. 

இதனையடுத்து இவருக்கு பூஞ்சை காளானை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், இவரை தவறாக புரிந்து கொண்டது தொடர்பாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்து, இந்த விஷயம் குறித்து பிற மருத்துவர்களுக்கும் தெரியப்படுத்தி அறிவுறுத்தியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pennsylvania girl affected liver problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->