நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள்.! 16 பேர் பரிதாப பலி., 70 க்கும் மேற்பட்டோர் உயிர் ஊசல்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., என்னதான் வளர்ச்சியடைந்த தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் இருந்தாலும் விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் உலகம் முழுவதும் நொடிப்பொழுதிற்கு பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. 

அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் பலர் தங்களின் உயிர்களையும் உடமைகளையும் உறவினர்களையும் இழந்து வாடி வருகின்றனர். இந்த நிலையில்., இரண்டு இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு., அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட சாதிக்பாத் தேசில் பகுதியில் வால்கர் என்ற இரயில் நிலையமானது உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் சரக்கு இரயிலானது நின்று கொண்டு இருந்தது. இந்த சமயத்தில் எதிர்புறத்தில் இருந்து இரயில் ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. 

pakisthan train accident, pakisthan train,

இரயில் வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் எஞ்சின் உட்பட மூன்று பெட்டிகள் சுக்கு நூறாக நொறுங்கிய நிலையில்., இரயிலில் பயணம் செய்த எட்டு ஆண்கள் உட்பட 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது 70 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கி பரிதவித்த மக்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Pakistan train accident 16 peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->