தற்கொலைப்படையின் கொடூர தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியான சோகம்.!! டிவியில் லைவ் பார்த்த சமயத்தில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பயங்கவாதிகளின் ஆதிக்கமானது தொடர்ந்து அதிகரித்து., ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலை படை தாக்குதல்கள் கடந்த சில வருடங்களாகவே அதிகளவு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்., பொதுமக்கள் அதிகளவு கூடும் பொது இடங்களை பயங்கரவாதிகள் தங்களுக்கு ஆதரவாக உபயோகம் செய்து., தற்கொலை படை தாக்குதல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

நைஜீரிய நாடுகளில் போகோஹறாம் தீவிரவாதிகளுக்கு., அந்நாட்டின் இரண்டுவதினாருக்கும் இடையே அதிக வருடங்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்., அந்நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்கள்., கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியின் மூலம் கூட்டமாக பார்த்து கொண்டு இருந்தனர். 

இந்த நேரத்தில்., திடீரென கூட்டத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 40 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nigeria terrorist attack 30 peoples died and 40 peoples hardly affected


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal