தீடீரென ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம்..! தலைதெறித்து ஓடிய மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு ஏற்படும் விபத்துகளால் பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மேலும்., மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களால் ஏற்படும் விபத்துகளை விட., அவ்வப்போது இயற்கை விபத்துகள் நிகழ்கிறது. 

இயற்கையில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தால் பல விதமான பாதிப்புகளுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் நிலையில்., டெக்டானிக் பிளேட் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் இருக்கும் இடத்தில்., அவ்வப்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. 

அவ்வாறு ஏற்படும் நிலநடுக்கத்தால் பல உயிர் சேதமும்., பொருட் சேதமும் ஏற்பட்டு வரும் நிலையில்., நிலநடுக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில்., நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டு., பெரும் சேதத்தினை ஏற்படுத்திவிடும். 

tectonic plates,

இந்த தருணத்தில்., நியூசிலாந்து நாட்டில் இருக்கும் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள தீவில்., அங்குள்ள உள்ளூர் நேரத்தின் படி 8.22 மணிக்கு பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.5 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தை அறிந்த மக்கள்., உயிரை கையில் பிடித்துக்கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியேறி., வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும்., இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in new zealand earthquake richter scale reading is 5.5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->