மகளிர் தினத்தில் வன்முறை விவகாரம்.. 60 பெண்கள் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெக்ஸிகோ நாட்டில் நாளொன்றுக்கு 10 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். 

இந்த விஷயத்தை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர். 

இந்த தருணத்தில், மகளிர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் மெக்சிகோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சுமார் 80 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி திடீரென வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் மீது பெண்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 

கண்களில் படும் பொதுச்சொத்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த வன்முறையின் காரணமாக சும்மர் 60 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mexico world women's day celebration violence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->