இந்தியர்கள் 311 பேரை போயிங் 737 விமானத்தில் அனுப்பிவைத்த மெக்சிகோ.! காரணம் என்ன?..!! - Seithipunal
Seithipunal


மெக்ஸிகோவில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்தினை தேடி அமெரிக்காவுக்குள் பல வருடங்களாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாகவும் நுழைந்து வரும் நிலையில்., அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லை வழியாக நுழைந்து வருகின்றனர். 

இவர்களை அமெரிக்கா அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும்., அமெரிக்காவுக்குள் அடைக்கலம் தேடி வரும் நபர்களை., எல்லையில் வைத்து தடுக்குமாறு குடியுரிமை துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும் உத்தரவிட்டு இருந்தார். 

இந்த செயல் அடுத்தடுத்து தொடர்ந்து வந்ததை அடுத்து., மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவில் அத்துமீறி நுழையும் நபர்களின் மீது மெக்ஸிகோ அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்., மெக்ஸிகோவின் இறக்குமதி பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பு செய்ய இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து மெக்ஸிகோ அரசின் சார்பாக குடியுரிமைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான சோதனையில்., உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்போரை நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட துவங்கினர். 

இதனையடுத்து வழக்கம்போல சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்த சமயத்தில்., சுமார் 311 இந்தியர்கள் அனுமதியின்றி மெக்ஸிகோவில் அனுமதியின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களை போயிங் 737 விமானத்தின் மூலமாக டெல்லி நகருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico Indians return Delhi due to without permission stays


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->