பிகினி உடையில் சுற்றித்திரிந்த பெண்.. காவல் துறையினர் நடவடிக்கையால் கொதித்தெழுந்த பெண்மணி.. வைரல் வீடியோ பதிவு.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில் அந்தந்த நாடுகளுக்கென்ற பல்வேறு சட்டங்கள் உள்ளது. பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வேலைவாய்பிற்காக செல்லும் நேரத்தில், நாம் செல்லும் நாட்டிற்கான சில சட்டங்கள் குறித்து அறிவது அவசியமான ஒன்றாகும். 

இந்த நிலையில், மாலத்தீவு என்பது சுமார் 1200 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளின் சேர்க்கையானதாக விளங்கி வருகிறது. இந்த தீவில் உள்ள சில பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிகினி உடையணிந்து செல்வது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விதிமுறையின் படி பிற இடங்களில் சுற்றுலா பயணிகள் பிகினி உடையில் சென்றால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்படி, அங்குள்ள கடற்கரை தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த பெண்மணி பிகினி உடையில் சுற்றி கொண்டு இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணை கைது செய்ய முயற்சித்துள்ளனர். 

இந்த நேரத்தில் பிகினி உடை அணிந்து இருந்த பெண்ணை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சிக்கவே, பெண் காவல் அதிகாரி தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக கத்தியுள்ளார். மேலும், காவல் அதிகாரியின் செயல்பாடுகள் மற்றும் பெண்ணின் செயல்பாடுகள் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பெண் காவல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பெண்ணை கைது செய்த நிலையில், பெண்ணிடம் காவல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், பெண் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Maldives girl arrest by police due to bikini dress walking


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->