பயணிகள் பேருந்து - லாரி நேருக்கு நேர் அசுர வேகத்தில் முட்டிக்கொண்டு சோகம்.! 12 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இவ்வாறான விபத்துகள் இன்றளவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. விபத்துகளால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தவிப்புகளை தவிர்க்க முடிவதே இல்லை. 

இந்த நிலையில்., கென்யா நாட்டில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. அங்கு உள்ள சாலை போக்குவரத்து பெரும் பிரச்சனையாக இருப்பதால்., இந்த விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கென்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள சில சியா கவுண்டியில் இருந்து., நாட்டின் தலைநகரான நைரோபியில் நேற்று பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து அங்குள்ள கிஸ்மு நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு., கிஷ்மு-கெரிக்கொ தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தது. 

நள்ளிரவு சுமார் 11 மணியளவில்., இந்த பேருந்திற்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் திடீரென இழந்ததால்., எதிர்புறம் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

accident, விபத்து,

இந்த விபத்தில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட சுமார் 12 பேர் பரிதாபமாக உயிர் உடல் நசுங்கி பலியாயினர். மேலும்., பேருந்தில் இருந்த 51 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான வாகன ஓட்டிகள்., இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர்., படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., உயிரிழந்தவர்களின் உடலை நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் வெளியே எடுத்தனர். 

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., சாலை விபத்து காரணமாக கடந்த ஒரு வருடத்தில் கென்யாவில் சாலை விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை 3000 பேர் ஆக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kenya bus lorry accident 12 peoples died in spot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->