ஜப்பானின் சொகுசு கப்பலில், பணிக்கு சென்று கண்ணீர் வடிக்கும் இந்தியர்கள்.. 2 பேருக்கு கரோனா அறிகுறி..!! - Seithipunal
Seithipunal


சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் நாட்டில் சுமார் 3,711 பேருடன் சென்ற ஜப்பானிய தனியார் நிறுவன சொகுசு கப்பல் கரோனா வைரஸின் பீதியால், ஜப்பான் நாட்டின் யோக்கோஹாமா துறைமுகத்தின் அருகேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த கப்பலில் சுமார் 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தமாக 138 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வரை கப்பல் அங்கேயே இருக்க ஜப்பானிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கப்பலில் இருக்கும் நபர்களுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்பது தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், சுமார் 63 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு இந்தியர்கள் உட்பட 174 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவல் ஜப்பானின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கப்பலை சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கூறி மத்திய மாநில அரசுகளுக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in japan ship indian 2 peoples affected corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->