ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை., அரை நாளில் பேயாக கொட்டி தீர்த்த சோகம்.! பரிதாப பலியான மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் உள்ள சீபா மற்றும் புகுஷிமா மாகாணத்தில் நேற்று முன்தினத்தில் பலத்த மழையானது பெய்து வந்தது. இந்த நிலையில்., சீபா மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வர வேண்டிய மழையானது., ஒட்டுமொத்தமாக அரை நாளில் கொட்டி தீர்த்தது. 

இதனையடுத்து அங்குள்ள 13 ஆறுகள் கரைபுரண்டு வெள்ளக்காடாக மிதக்கும் நிலையில்., தாழ்வாக இருக்கும் பகுதியில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில்., அங்குள்ள பல இடங்களில் நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. 

japan flood,

இரண்டு மாகாணத்திலும் சேர்த்து வெளுத்து வாங்கிய மழையை அடுத்து வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., நான்கு பேரை காணவில்லை. மேலும்., நிலச்சரிவில் சிக்கி சுமார் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ள நிலையில்., டோக்கியோவின் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In japan peoples died due to heavy rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->