கப்பலில் தனிமையில் இருக்கும் நபர்களுக்கும் அடுத்தடுத்து பரவிய கரோனா..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் மனிதர்களின் உடலில் கடும் காய்ச்சலை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனிதனின் உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் பரவியுள்ளது. சீனா உள்ளிட்ட நாடு முழுவதும் பிப்ரவரி 8 ஆம் தேதி நிலவரத்தின் படி சுமார் 30,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டதில் 724 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, சீனாவின் வூகான் நகரில் இருந்து கேரளா வந்த மூவருக்கு கரோனா வைரஸ் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் சீன நாட்டவர்கள் 65 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ள நிலையில், இன்று ஒரேநாளில் 81 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும், கடந்த மாதம் 20 ஆம் தேதிக்கு முன்னதாக ஜப்பான் நாட்டின் யோகோஹாமா நகரில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிற்கு டைமண்ட் பிரின்சஸ் என்கிற சொகுசு கப்பலொன்று சென்றிருந்தது. 

இந்த கப்பலில் சுமார் 2700 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 1045 ஊழியர்கள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று ஹாங்காங் நாட்டிற்கு சென்றிருந்தது. இந்த கப்பலில் இருந்து இறங்கிய 80 வயதுடைய முதியவர் ஹாங்காங்கில் இறங்கிய நிலையில், மீண்டும் வராமல் இருந்துள்ளார். இந்த நேரத்தில், முதியவருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது 30 ஆம் தேதியன்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சொகுசு கப்பலின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கப்பலும் ஜப்பான் நாட்டில் உள்ள ஒகினாவா மாகாணத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், நாகா துறைமுறைகத்தில் கப்பலை தனிமைப்படுத்தியுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கப்பலில் இருந்த யாருக்கும் எந்த செய்தியும் இல்லை என்றும், அனைவரும் தரையிறங்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து யோகோஹாமா நகருக்கு புறப்பட்ட கப்பல், மாலை நேரத்தில் வந்தடையவே, கப்பலில் இருந்த 8 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. 

இதனையடுத்து இவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் சூழந்தது. இதன் அடிப்படையில் கப்பலில் பயணம் செய்த 2666 பயணிகள் மற்றும் 1045 ஊழியர்கள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, துறைமுகத்தில் இருந்து சில மைல் தொலைவில் இருக்கும் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில், மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் சோதனையில் கரோனா வைரஸ் தாக்கம் தென்படாத நபர்கள் மட்டும் ஜப்பானிற்கு வரலாம் என்றும் சுகாதாரத்துறை கூறியிருந்தது. இவர்களில் 10 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியான நிலையில், தற்போது 61 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in japan carona virus 61 members affected


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->