இங்கிலாந்து லாரியில் பிணங்கள் விவகாரம் போன்று., இத்தாலியில் பகீர்.! காவல்துறையினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் நகர் கிழக்கு பகுதியில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரை அருகேயிருக்கும் வாட்டர்கிலேட் தொழிற்சாலை பகுதியானது உள்ளது. இந்த பகுதியில் காவல் துறையினர் வழக்கம் போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த தருணத்தில்., அங்கிருந்த லாரியானது சந்தேகிக்கும் வகையில் இருந்ததை அடுத்து., இந்த லாரியை காவல் துறையினர் சோதனை செய்ய முடிவு செய்து., சோதனை செய்துகொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., லாரிக்கு உள்ளே 39 பிணங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., லாரியில் இருந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

London truck contains died body,

இந்த விசாரணையில்., அங்குள்ள வடக்கு அயர்லாந்து பகுதியை சார்ந்த சுமார் 25 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்., லண்டன் நகருக்குள் பிணத்துடன் லாரி வந்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது இவர்கள் வியட்னாம் நாட்டினை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில்., இதனைப்போன்ற மற்றொரு துயரங்கள் அரங்கேறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்., பிரான்ஸ் நாட்டில் உள்ள இத்தாலி எல்லைக்கு அருகே உள்ள பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., அங்கு லாரியொன்று வந்துள்ளது. 

இந்த லாரியை சோதிக்க திட்டமிட்டு சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக., முற்றிலும் குளிரூட்டப்பட்ட லாரியின் உள்ளே சுமார் 31 பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியின் ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர்., அகதிகளை இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்த விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Italy Refugees rescued by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->