இத்தாலியில் பெரும் கோரம்.. 793 பேர் ஒரேநாளில் துடிதுடித்து பலி.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 182 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 308,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,068 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 332 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலி நாட்டில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 627 பலியாகிஇருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கரோனாவிற்கு மொத்தமாக நேற்று 793 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 4,825 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இந்த பலி எண்ணிக்கை சீன நாட்டினை கீழே தள்ளி உயர்ந்துள்ளது. மேலும் பலர் அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இத்தாலி நாட்டில் கடந்த மூன்று நாட்களாகவே பலி எண்ணிக்கை 400 க்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 793 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Italy corona virus peoples died per day 793 nos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->