கைதான ஐஎஸ் பயங்கரவாதியை சரக்கு வாகனத்தில் தூக்கி சென்ற பாதுகாப்பு படையினர்.!! - Seithipunal
Seithipunal


ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வரும் நாடாக ஈராக்கும் இருந்து வருகிறது. அந்த வகையில் ஈராக்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் அமெரிக்க படைகளும் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பயங்கரவாதிகள் அதிக்கமானது குறைந்தபாடில்லை. 

இரு தரப்பிற்கும் இடையே பல தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வரும் அப்துல் பாரி என்பவர் அடிக்கடி வீடியோ பதிவு செய்து மிரட்டல்களை தெரிவித்து வந்துள்ளார். 

இவரை ஈராக் பாதுகாப்பு படை விசாரணை குழு அங்குள்ள ஹோசூர் நகரில் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.  இவனை கைது செய்த காவல் துறையினர் சுமார் 250 கிலோ எடை கொண்ட அவனை காவல் வாகனத்தில் அழைத்து செல்ல இயலாது சிரமப்பட்டனர். 

இதனையடுத்து சுமார் 250 கிலோ இருக்கும் பயங்கரவாதியை சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு ஆதரவாக செயல்படாத நபர்களை கொலை செய்வதாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்ட்டுள்ளான்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iraq terrorist leader arrest by army


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->