இராணுவப்படை நடத்திய தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...!!  - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டை பொறுத்த வரையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடுமையான ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். இவர்களின் ஆதிக்கமானது அதிகளவு இருந்த நிலையில்., இவர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழித்ததாக கடந்த 2017 ஆம் வருடத்தின் போது அப்போதைய பிரதமான ஹைதர் அல்-அபாடி அறிவித்திருந்தார். இந்த நிலையில்., கடந்த சில மாதங்களாக மீண்டும் பயங்கரவாதிகளின் தலையானது ஓங்கியுள்ளது. 

இந்த செயலின் காரணமாக அந்த நாட்டின் பல பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து மக்களை காப்பதற்கு ஈராக் மற்றும் அமெரிக்க நாட்டின் தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

terrorist,

இந்த சமயத்தில்., ஈராக் நாட்டின் மாகாண பாதுகாப்பு தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது., ஈராக் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாளா மாகாணத்தின் மலைப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இராணுவ துறையினருக்கு இரகசிய தகவலானது கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த இராணுவத்தினர் அம்மாகாணத்தின் பல்வேறு பகுதியில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

இந்த தேடுதல் வேட்டையின் போது சுமார் 19 பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டும்., 16 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது பயங்கரவாதிகள் ஆபத்தான சமயத்தில் பதுங்கியிருக்கும் 16 பதுங்கு குழிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளது. அதில் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iraq terrorist killed by army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->