விமான தடுப்புச்சுவரை உடைத்து தடபுடலாக நெடுஞ்சாலைக்குள் புகுந்த விமானம்.. வைரல் காணொளி காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் தினமும் பல்வேறு விதமான விபத்துகள் தொடர்ந்து அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்களின் தேவைக்காக மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த, வேலைகளை குறைக்க கண்டறியப்பட்ட வாகனங்கள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகிறது.

சில நேரத்தில் அதிஷ்டத்தின் காரணமாக விபத்துகள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இல்லாமல் தப்பித்து வருகின்றனர். இதனைப்போன்ற சம்பவம் ஒன்று ஈரான் நாட்டில் நடைபெற்று மக்கள் தப்பித்துள்ளனர்.

ஈரான் நாட்டில் பயணிகள் விமானமானது ஓடுபாதையில் இருந்து சறுக்கிக்கொண்டு அங்குள்ள நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நாட்டில் உள்ள காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள பயணிகள் விமானம், அங்குள்ள மஹ்ஷாஹர் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

மேலும், இந்த விமானம் இங்கிருந்து புறப்பட்ட நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுப்ட கோளாறின் காரணமாக மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. 

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக சுமார் 130 பயணிகள் எந்த விதமான காயமும் இல்லாமல் தப்பிய நிலையில், விமானம் ஓடுபாதையில் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iran flight crash passengers lucky saved and landed in road side


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->