அணுமின் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் திகைக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் நிலநடுக்க பதிவுகள் தினம் தோறும் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. நிலநடுத்தட்டுகள் என்று அழைக்கப்படும் டெக்டானிக் தட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகள் மற்றும் பகுதியில் நிலநடுக்கம் அவ்வப்போது தொடர்ச்சியாக ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு சீன நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூவர் பலியானதும்., பலர் பேர் படுகாயமடைந்ததும் அரங்கேறிய நிலையில்., தற்போது ஐரோப்பாவில் உள்ள அல்போனியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட டெல்லி., ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

iran earthquake, ஈரான் நிலநடுக்கம்,

இந்த நிலையில்., தற்போது ஈரான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் புஷேகர் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்திற்கு அருகிலேயே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாகவும்., நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியான அணுமின்நிலைய பகுதியில் இருந்து 45 கிமீ சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iran earthquake peoples panic


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->