கொத்து கொத்தாக செய்து மடியும் ஈரான் மக்கள்.. அதிர்ச்சி காரணங்கள்.!! மக்களே பாதுகாப்பாக இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


ஆசிய கண்டத்தில் உள்ள சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஈரானில் 21,638    பேர் பாதிக்கப்பட்டுளள்னர். 1,685 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டின் சுகாதாரத்துறை 10 நிமிடத்திற்கு ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும், ஒரு மணிநேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஈரான் சுகாதாரத்துறை அறிவித்தது.

மேலும், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவில் இருந்து வரும் விமானங்கள் நுழைய பிப்ரவரி மாதம் தடை விதித்த நிலையில், மஹான் ஏர் என்கிற தனியார் விமானம் மட்டும் சீன நாட்டிற்கு சேவை செய்து வந்தது. 

இந்த விமானத்தில் சென்ற நபர் கரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழக்கவே, இதுவே ஈரானில் கரோனா அதிகளவு காரணம் என்று கூறி குற்றசாட்டு எழுந்தது. மேலும், ஏற்கனவே பொருளாதார தடையின் காரணமாக மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் ஈரான் தவித்து வந்தது. 

இந்த பொருளாதார தடையினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளரும் ஈரான் கடிதம் எழுதிய நிலையில், மருத்துவ பணியாளர்களும் ஈரானில் குறைந்தளவே இருக்கின்றனர்.

மேலும், முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதும், போதுமான மருத்துவ சோதனை நிலையமும் இல்லை. இதன் காரணமாக சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உதவி வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

அங்குள்ள மக்களால் கொண்டாடப்படும் நவ்ரூஸ் புத்தாண்டு தினத்தன்று தடை விதித்து, மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிக்கை அறிவித்தது. சில நகரில் மக்கள் வெளியே வராமல் இருந்த நிலையில், பல இடத்தில் மக்கள் வழக்கம்போல போது இடத்தில் கூடியுள்ளனர். மேலும், அந்நாட்டு பொதுமக்களிடையே கரோனா தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை என்று கருத்தும் நிலவி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iran corona virus death ratio


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->