இந்தோனேசியாவின் மொராபி எரிமலை வெடிப்பு.. மனதை அதிர்ச்சியாக்கும் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தோனேசிய நாடு விளங்கி வருகிறது. இந்த நாட்டில் இயற்கையின் அழகு எழில் கொஞ்சும் அளவில் வியப்பூட்டும் வகையில் இருந்தாலும், நிலநடுக்கம் மற்றும் சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகளும் நிகழ்ந்து வருகிறது.

இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாவா தீவில் சுறுசுறுப்பான எரிமலையாக செயல்பட்டு வரும் மொராபி எரிமலையானது நேற்று திடீரென வெடித்து சிதற துவங்கியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பானது பூமியில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்திற்கு சாம்பலை வெளியேற்ற வைத்துள்ளது. 

மேலும், இப்பகுதியில் உள்ள 3 கிமீ சுற்றுவட்டாரத்தில் எரிமலை சாம்பலின் புகை மணல் போலே பொழிந்துள்ளது. எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

இந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெடித்ததில் சில ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றிய நிலையில், தற்போது 6 கிமீ தூரத்திற்கு சாம்பலை வெளியேற்றியுள்ளது. கடந்த 2010 வருடத்தில் எரிமலை வெடித்து சிதறி 353 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Indonesia merapi volcano blast video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->