உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து... 30 குரங்குகள் பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைத்துள்ள ரெயின் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் கிரபெல்ட்டு நகரம் உள்ளது. இந்த நகரில் பழமைவாய்ந்த பூங்காவானது செயல்பட்டு வருகிறது. 

இந்த பூங்காவில் சிங்கம்., புலி., யானை மற்றும் குரங்கு போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனஉயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்., வருடம்தோறும் சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. 

இவ்வுயிரியல் பூங்காவனது கடந்த 1975 ஆம் வருடத்தில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் குரங்குகளுக்காக பிரத்தியேக சரணாலயம் திறக்கப்பட்ட நிலையில்., இந்த சரணாலயத்தில் கொரில்லா., சிம்பன்சி., ஓராங்குட்டான் போன்ற பல்வேறு இனத்தினை சார்ந்த 32 குரங்குகள் இருந்துள்ளது. 

Germany fire acc,

இந்த சரணாலயத்தில் நேற்று முன்தினத்தின் போது ஏற்பட்ட தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் சரணாலயம் முழுவதும் பற்றி எரிய துவங்கியது. இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.  

இந்த தீவிபத்தில் சரணாலயம் முற்றிலும் எறிந்துள்ள நிலையில்., மொத்தமாக சுமார் 30 குரங்குகள் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும்., இதில் இருந்த 2 சிம்பன்சி குரங்குகள் மட்டும் உயிர் தப்பியுள்ளது. இந்த தீவிபத்திற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in germany zoo fire accident monkey died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->