விடுமுறையை கொண்டாட தயவு செய்து ஒத்துழையுங்கள்..! இரயில்வே நிர்வாகம்..!! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் அரசுடைய ஓய்வூதிய திட்டங்களின் சீர்திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பலதரப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதால்., ஊழியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது.

மேலும்., ஓய்வூதிய வயது வரம்பும் 62 வயதில் இருந்து 64 வயதாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது சேவைக்காலத்தினை பொறுத்து ஓய்வூதிய தொகையில் உள்ள மாற்றம்., 64 வயதிற்கு முன்னதாக ஓய்வுஊதியம் கோரும் பட்சத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் போன்றவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

france, france strike,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துவக்கத்தில் சில தொழிற்சாலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்., தற்போது பிரான்ஸ் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள்., வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினர்., விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது பிரான்ஸ் நாடே ஸ்தம்பித்து உள்ள நிலையில்., கடந்த ஒன்பது நாட்களாக முக்கிய நகரங்களின் போக்குவரத்து சேவை அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நாட்டில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலமான "ஈபிள் டவர்" உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்., போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டானது வீசப்பட்டு கலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும்., தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

france strike, france,

இந்த நேரத்தில்., வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உள்ள விடுமுறை நாட்களை முன்னிட்டு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய பிரான்ஸ் தேசிய இரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும்., விடுமுறை தினத்தில் குடும்பத்தை சந்திப்பது முக்கியமானது என்றும்., 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் இப்பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்., இரயில் பயணம் அதிகமான மக்களால் செய்யப்படும் என்றும்., விடுமுறை காலத்தினை முன்னிட்டு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in France strike give little leave request by railway department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->