காதலிக்க பெண் வேண்டும்.. 40 ஆயிரம் செலவழித்து ப்ளக்ஸ் வைத்த முரட்டு சிங்கிள்..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டனைச் சார்ந்தவர் மார்க் ரோப். இவர் தனது எதிர்கால காதலிக்காக சுமார் இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் ரூபாய் செலவழித்து நகரின் பிரதான பகுதியில் பேனரை வைத்துள்ளார். 

அவருக்கு தற்போது 30 வயதாகும் நிலையில், தனது காதலியை கண்டறிய டேட்டிங் மார்க் என்ற இணையதள பக்கத்தையும் புதிதாக துவக்கியுள்ளார். 

இந்த இணையதள பக்கத்தில் இவருடன் டேட்டிங் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த தளத்தில் தற்போது வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தனது இணையப்பக்கத்தில், தனது விவரங்களையும்  தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தனது கால் செருப்பு அளவு முதல் தன்னை முத்தமிட்ட பெண்கள் வரை அனைத்தையும் கூறியுள்ளார். 

இந்த பெண்களில் இருந்து தனக்கான பெண்ணை கட்டாயம் தேடிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனை கண்ட நமது உள்ளூர் முரட்டு சிங்கிள்கள் நாமும் இதே முயற்சியை செய்து பார்க்கலாமா என்று யோசனை செய்ய துவங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England youngster create advertisement for committed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->