எதிரெதிரே வந்த லாரி மோதி 12 பேர் பலியான சோகம்.! பணிக்கு செல்லும் சமயத்தில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் நொடிப்பொழுதிற்கு பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. நாம் என்னதான் பாதுகாப்பான முறையில்., பல விதமான தொழில்நுட்பத்தை உபயோகம் செய்தாலும் சாலை விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதனைப்போன்று நடைபெறும் விபத்துகளில் சிக்கும் மக்கள் தங்களின் உடமைகள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும்., உயிரை இழந்தும்., குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை இழந்தும்., குடும்பத்தையே இழந்தும் வாடி வருகின்றனர். 

Egypt road, Egypt worst road

எகிப்து நாட்டில் உள்ள பல பகுதிகளில் இன்னும் மோசமான சாலைகள் மற்றும் பராமரிக்காத சாலைகள் செயல்பாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு செயல்பாடுகளில் இருக்கும் சாலைகள் பிரதான சாலைகள் என்பதால் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தவேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

இதனால் அவ்வப்போது பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் வருடத்தின் போது வெளியான புள்ளி விபரங்களின் படி சுமார் 3087 பேர் பரிதாபமாக சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமல்லாது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

accident, road accident,

இந்த நிலையில்., மீண்டும் கோர விபத்து சம்பவமானது அரங்கேறியுள்ளது. எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு அருகேயுள்ள அஃதொப்பர் சிட்டிக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரியானது சாலையின் எதிர்திசையில் வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் 12 பேர் பரிதமாக உயிரிழந்தனர். 

இது குறித்த தகவல் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது மீண்டும் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in egypt worst road accident 12 peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->